
நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்
கவுண்டமணியின் மனைவி சாந்தி, 67. அந்தகாலத்திலேயே இவரை காதல் திருமணம் செய்தார். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று(மே 5) சென்னையில் காலமானார். கவுண்டமணி தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு நாளை(மே 6) காலை 11.30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!