
ஏப்ரல் 10ல் 4 படங்கள் ரிலீஸ்
கடந்த வாரம் ஏப்ரல் 3ம் தேதி “கார்மேனி செல்வம், காளிதாஸ் 2, லீடர், மரகதமலை, நீளிரா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி, “கெஸ்ட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மனிதன் தெய்வமாகலாம், டிஎன் 2026” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இந்த வருடத்தில் வெளியான சில சிறிய பட்ஜெட் படங்கள் தான் அனைவருக்கும் லாபத்தைத் தந்த படங்களாக அமைந்தன. இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது. அவருடைய முந்தைய இரண்டு படங்களான "டிராகன், டியூட்" 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துக் கொடுத்தது. அது போல இந்தப் படத்தின் வசூலும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!