Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பள்ளியில் காய்கறி தோட்டம் மாணவர்களிடையே ஆர்வம்

பள்ளியில் காய்கறி தோட்டம் மாணவர்களிடையே ஆர்வம்

பள்ளியில் காய்கறி தோட்டம் மாணவர்களிடையே ஆர்வம்

பள்ளியில் காய்கறி தோட்டம் மாணவர்களிடையே ஆர்வம்

UPDATED : ஜன 27, 2025 12:00 AMADDED : ஜன 27, 2025 11:35 AM


Google News
Latest Tamil News
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் அரசு பள்ளியில் மாணவர்கள் காய்கள் தோட்டம் அமைத்துள்ளனர்.

தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில், எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், கிணத்துக்கடவுக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளி வளாகத்தில், 1,500 சதுரடியில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளனர்.

இதில், தக்காளி, வெண்டைக்காய், மிளகாய், முள்ளங்கி, அரசாணிக்காய், புடலை, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், வாழை, பப்பாளி, கறிவேப்பிலை, மலை நெல்லி, முருங்கைக்காய், மஞ்சள், துளசி போன்றவைகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

தோட்டத்தை பள்ளி மாணவர்கள் முறையாக பராமரித்து வருகின்றனர். நோய் தாக்குதல், பயிர்களில் சத்து குறைபாடு போன்றவை குறித்து கேட்டறிந்து, அதற்கேற்ப இயற்கை உரம் அளித்து பராமரிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, இங்கு விளையும் காய்கறிகளை காலை உணவு திட்டம் மற்றும் மதிய சத்துணவு திட்டத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு படிப்பு மட்டும் இன்றி, விவசாயத்திலும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. மாணவர்கள் காய்கறிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், என்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us