கல்லூரி ஆசிரியர்களின் டிஸ்மிஸ் திரும்பப் பெற வலியுறுத்தல்

UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 07:48 PM
புதுடில்லி:
டில்லி அம்பேத்கர் பல்கலையில், சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு பேராசிரியர்களை மீண்டும் நியமிக்க, மத்தியப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
டில்லி அரசின் அம்பேத்கர் பல்கலையின் பேராசிரியர்கள் சலீல் மிஸ்ரா மற்றும் அஸ்மிதா கப்ரா ஆகிய இருவரும் கடந்த மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், அவர்களுக்கான பணப்பலன்களும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கல்வி இயக்கத்துக்கான கூட்டு மன்றம், அகில இந்திய பல்கலை, கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மத்தியப் பல்கலை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், டில்லி முதல்வர் ஆதிஷி சிங்கை சந்தித்தனர்.
அப்போது, கடந்த 2018- - 2019ம் ஆண்டில் 38 ஒப்பந்த நிர்வாக ஊழியர்களை முறைப்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டால், சலீல் மிஸ்ரா மற்றும் அஸ்மிதா மிஸ்ரா ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்கலை நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த 2020ல் மூன்று விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு முறைப்படுத்தல் செயல்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் முரண்பாடுகளை விசாரித்தது. முதல் குழு ஊழலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது. அடுத்த இரண்டு குழுக்கள் தவறான நடத்தை என குற்றம் சாட்டியது. இது, சுதந்திரமான மற்றும் மதச்சார்பற்ற கல்வியாளர்களை பயமுறுத்தும் நடவடிக்கை. ஜனநாயக முறைகள் அழிக்கப்படுகின்றன.
கல்வித் துறையையும் நிர்வகிக்கும் டில்லி முதல்வர் இரண்டு ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ததை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலை நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஆதிஷி உறுதியளித்தார்.