திட்டமிடாத சான்றிதழ் வழங்கும் முகாம்; அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 09:55 AM
புதுச்சேரி:
திட்டமிடல் இல்லாத சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்களால் மாணவர்கள், பெற்றோர்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாணவர்களை அலைகழிக்க கூடாது என்பதற்காக நகர பகுதிகளிலும் கிராமப் புறங்களிலும் சான்றிதழ் நடத்தும் சிறப்பு முகாம்களை வருவாய் துறை நடத்தி வருகிறது.
ஆனால், தாசில்தார் அலுவலகங்களில் காத்துக்கிடந்த அதே நிலைமை தான் முகாம்களிலும் நடக்கிறது. முகாம்களுக்கு முன்கூட்டிய திட்டமிடல் இல்லை. மாணவர்கள், பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக வாடகை வீடுகளை அடிக்கடி மாறி குடியிருப்போரிடம் வருவாய் துறை வி.ஏ.ஓ.,க்கள் நடந்துகொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாது.
2001க்கு முன்பு புதுச்சேரியில் வாழ்ந்தவரா, சாதி சங்கத்தில் போய் சான்றிதழ் வாங்கி வா, இரண்டு வீடுகள் மாறும்போது இடைப்பட்ட ஆறு மாதம் எங்கே வசித்தீர்கள் என சட்டப்படி கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு, பெற்றோர்களை கொடுமைப்படுத்துகின்றனர்.
இது போன்ற செயல்களுக்கு வருவாய்த் துறையின் முறையற்ற, திட்டமிடாத இந்த முகாம்களே முழு பொறுப்பு. இதற்கு பொறுப்பேற்று அந்த துறையை நிர்வகிக்கும் கலெக்டர், உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மாணவர்கள், பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கால தாமத்தை தவிர்த்து விரைந்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.