அனைவரும் கட்டாயம் உயர்கல்வி பயில வேண்டும்: மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 09:57 AM

விழுப்புரம்:
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளி மாணவர்களுக்காக, 'என் கல்லுாரி கனவு' உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தேர்ச்சி பெற்ற அனைவரும் கட்டாயம் உயர்கல்வி பயில வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியை கலெக்டர் பழனி தொடங்கி வைத்து பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், என் கல்லுாரி கனவு திட்டத்தினை செயல்படுத்தி, மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்துகிறது.
கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும். அவர்களுக்கு பணம் ஒரு தடையாக அமைந்து விடக்கூடாது என்பதால், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதல் மாணவர்களுக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாதம் தோறும் 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்விக்கு முன்னுரிமை வழங்கிடும் வகையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்விக்கு வழிகாட்டல் வழங்குவதோடு, கல்வி கடனுதவிகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி சதவீதம் அடைந்துள்ளது. உயர்கல்வி பயில்வோர் விகிதமும் கடந்தாண்டுகளில் 40 சதவீதத்தில் இருந்து, இந்தாண்டு 80 சதவீதம் உயர்ந்துள்ளது.
தேர்ச்சி பெற்ற அனைவரும் கட்டாயம் உயர்கல்வி பயில வேண்டும். மருத்துவம், இன்ஜினியரிங் மட்டுமின்றி, டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டப்படிப்புகள், தொழில் படிப்புகள் ஏராளம் உள்ளன. மாநிலம் தொழில்துறையில் 2 மடங்கு வளர்ச்சி பெற உள்ளதால், பல நிறுவனங்களும், அதனால் பல வேலை வாய்ப்புகளும் கிடைக்க உள்ளது.
உயர்கல்விக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆதிதிராவிடர் நலத்துறை கலியவரதன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.