அரசு பள்ளிக்கு புகுந்த ஆசாமிகள் அத்துமீறல்! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 08:48 AM
அவிநாசி:
திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள், சலுான் கடையில் உள்ள தலைமுடியை கொட்டியும், கழிப்பறைகளை சேதப்படுத்தியும் அட்டூழியம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள் விடுமுறையை முடிந்து நேற்று வழக்கம்போல பள்ளியை திறந்து உள்ளனர். பள்ளியின் நுழைவாயில், மாணவர்கள் வகுப்பறை மற்றும் தலைமையாசிரியரின் அலுவலகம் ஆகியவற்றின் முன், சலுான் கடையில் வெட்டிய தலைமுடியை கொண்டு வந்து மர்ம ஆசாமிகள் கொட்டி சென்றுள்ளனர்.
இதுதவிர, தலைமையாசிரியர் அறை கதவில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற காலணியை கட்டி தொங்கவிட்டுள்ளனர். மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை கதவுகளை சேதப்படுத்தியும், தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தியும் உள்ளனர்.
அப்படியும் அடங்காத மர்ம ஆசமிகள், வகுப்பறையின் பூட்டு உடைத்து நோட்டு, புத்தகங்களை கிழித்து வீசி எறிந்துள்ளனர். அங்கேயிருந்த மின் விசிறி, சேர்களையும் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த அலங்கோலத்தை பார்த்த ஆசிரியர்கள், மாணவர்கள்அதிர்ச்சி அடைந்தனர். தலைமையாசிரியர் (பொறுப்பு) லைசாலி, போலீசாருக்கு தகவல் அளித்தனர். பெற்றோர் சிலர் கூறுகையில், அரசுப் பள்ளிக்குள் விடுமுறை நாளில் அத்துமீறி நுழைந்து, அட்டூழியம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும், என்றனர்.
ஏற்கனவே, இதேபள்ளியில், இருமுறை இதேபோல் நடந்துள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர். ராக்கியாபாளையம் பள்ளியில் நடந்ததை அறிந்த சி.இ.ஓ., உதயகுமார், உடனே பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.