திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி தமிழ் வளர்ச்சித்துறை அழைப்பு

UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 08:49 AM
திருப்பூர்:
திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து, கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிகுந்தவர்களாக விளங்க வேண்டும் என, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சிறப்பு போட்டி நடத்தப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு, 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து, ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறள் முழுவதையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருக்குறளில் உள்ள, இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் போன்ற விவரங்களை தெரிந்திருப்பது, கூடுதல் தகுதியாக ஏற்கப்படும்.வெற்றி பெறும் மாணவர்களுக்கு, தலா, 15 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டுச்சான்றிதழும் கவழங்கப்படும்.
திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள், திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம். மேலும், https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும், 30ம் தேதிக்குள், தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குனர், துணை இயக்குனர் அலுவலகம், 6 வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.