மதுரையில் 3 சிறந்த அரசு பள்ளிகள் தேர்வு
மதுரையில் 3 சிறந்த அரசு பள்ளிகள் தேர்வு
மதுரையில் 3 சிறந்த அரசு பள்ளிகள் தேர்வு
UPDATED : நவ 13, 2024 12:00 AM
ADDED : நவ 13, 2024 08:28 AM
மதுரை:
மதுரையில் மூன்று அரசு தொடக்க பள்ளிகள் 2023 - 2024 க்கான சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் தொடக்க கல்வி சார்பில் அடிப்படை வசதி மேம்படுத்துதல், கல்வித்தரம், ஆசிரியர்கள் திறன், பள்ளி வளாக துாய்மை பல்வேறு காரணிகளில் ஆய்வு செய்யப்பட்டு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் இந்தாண்டு மதுரையில் அலங்காநல்லுார் ஒன்றியத்தில் ராமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, மதுரை மேற்கு ஒன்றியத்தில் பரசுராமன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, கள்ளிக்குடி ஒன்றியத்தில் சிவரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தேர்வு செய்யப்பட்டது.
பி.இ.ஓ.,க்கள் சாந்தி (கள்ளிக்குடி) ஜோஸ்பின் ரூபி (மேற்கு), ஜெஸிந்தா அன்புமொழி ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொன்மணி, அகிலா, ஜோசப் இருதயராஜ், ஆசிரியர்களை பாராட்டினார்.