திறந்தநிலை பல்கலை அட்மிஷன் துவக்கம்
திறந்தநிலை பல்கலை அட்மிஷன் துவக்கம்
திறந்தநிலை பல்கலை அட்மிஷன் துவக்கம்
UPDATED : மே 17, 2024 12:00 AM
ADDED : மே 17, 2024 03:22 PM

சென்னை:
தமிழக திறந்தநிலை பல்கலை பட்டப் படிப்புகளுக்கு, ஆன்லைன் வழி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை பதிவாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 2024 - 25ம் கல்வி ஆண்டுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கும், பல்கலையால் நடத்தப்படும் இதர படிப்புகளுக்கும், ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இதற்கான கல்வித்தகுதி, கட்டணம் போன்ற விபரங்கள், பல்கலையின், www.tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யு.ஜி.சி., அங்கீகாரத்தின்படி, இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள மாணவரும், இந்த படிப்பில் சேரலாம்.
ஆனால், நேரடி கல்வி வகுப்புகள் மற்றும் தேர்வுகள், தமிழகத்தில் உள்ள கல்வி உதவி மையங்களில் மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.