Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ விசுவல் ஆர்ட்ஸ் மாணவர் சேர்க்கை

விசுவல் ஆர்ட்ஸ் மாணவர் சேர்க்கை

விசுவல் ஆர்ட்ஸ் மாணவர் சேர்க்கை

விசுவல் ஆர்ட்ஸ் மாணவர் சேர்க்கை

UPDATED : மே 17, 2024 12:00 AMADDED : மே 17, 2024 03:26 PM


Google News
Latest Tamil News

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ், சென்னையில் செயல்படும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் பட்டப்படிப்பு
கள்
:
பேச்சுலர் ஆப் விசுவல் ஆர்ட்ஸ் - இளநிலை காட்சிக்கலை பிரிவுகள்: சினிமாட்டோகிராபி - ஒளிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியட், ஆடியோகிராபி, டைரக்ஷன், ஸ்கீரின் பிளே ரைட்டிங், பிலிம் எடிட்டிங், அனிமேஷன் அண்டு விசுவல் எபக்ட்ஸ்
தகுதிகள்:
சினிமாட்டோகிராபி, டிஜிட்டல் இண்டர்மீடியட் மற்றும் ஆடியோகிராபி ஆகிய படிப்புகளுக்கு 12ம் வகுப்பில், இயற்பியல் மற்றும் வேதியியல் அல்லது தொழில்படிப்புகள் போன்ற பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும். டைரக்ஷன், ஸ்கீரின் பிளே ரைட்டிங், பிலிம் எடிட்டிங், அனிமேஷன் அண்டு விசுவல் எபக்ட்ஸ் ஆகிய படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை:
www.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முதல்வர், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை - 600 113 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியே விண்ணப்பப் படிவம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 27
விபரங்களுக்கு:
www.tn.gov.in




      Our Apps Available On




      Dinamalar

      Follow us