அரசு கலை கல்லுாரிக்கு வந்தார் புதிய முதல்வர்!

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 06:08 AM
கோவை:
கோவை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக, எழிலி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில், முதல்வராக பணியாற்றி வந்த உலகி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். இதனால், கல்லூரியின் முதல்வர் பணியிடம் காலியாக இருந்து வந்தது. அந்த பணியிடத்தில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக் கல்லூரியில், முதல்வராக பணிபுரிந்து வந்த எழிலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கோவை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக எழிலி நேற்று பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே, இதே கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.