Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AMADDED : ஜூன் 24, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில் பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொ.துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களால், 58 மாணவ மாணவியர் பள்ளி படிப்பை விட்டு இடைநின்றது கண்டறியப்பட்டது.

இவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசி குழந்தைகளை மீண்டும் படிக்கவேண்டியது அவசியம் குறித்து, மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பிரபாவதி ஆசிரியர்கள் சக்திவேல், விவேகானந்தன் ஆகியோர் துறிஞ்சிப்பட்டி, பவித்ரா நகர், புத்தர் நகர் உள்ளிட்ட பகுதியில் இடைநின்ற மாணவர்களை தேடி வீடுகளுக்கு சென்று மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தனர்.

அப்போது துரிஞ்சிப்பட்டியில், 10ம் வகுப்பு படித்து இடைநின்ற அருணாச்சலம் என்ற மாணவன் வறுமையால் பள்ளிக்கு வராமல் இடை நின்றது தெரிய வந்தது. அவரின் பெற்றோரிடம் பேசி, நேற்று குறிஞ்சிப்பட்டி அரசு பள்ளியில் மீண்டும், 10ம் வகுப்பு சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us