புத்தக திருவிழாவை பார்வையிட்டு மாணவர்கள் பயனடைய அறிவுறுத்தல்

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 06:12 AM

கிருஷ்ணகிரி:
ஓசூரில், 12 நாட்கள் நடக்கவுள்ள புத்தக திருவிழா குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஓசூரில் ஜூலை, 12 முதல், 23 வரை, 13வது புத்தக கண்காட்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து, ஓசூர் ஓட்டல் ஹீல்ஸ் கூட்டரங்கில் புத்தக கண்காட்சியை நடத்துகிறது.இதில் மொத்தம், 100 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், 2 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. நாள்தோறும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், பல்வேறு தலைப்புகளில், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
மாணவர்களை புத்தக வாசிப்பவர்களாகவும், புத்தக வாசிப்பின் மூலம் தலைசிறந்தவர்களாக உருவாக்குவதே, இந்நிகழ்வின் முக்கிய நோக்கம். எனவே, நம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், இந்த புத்தக திருவிழாவை பார்வையிட்டு அரிய தகவல்களுடன் கூடிய புத்தகங்களை வாங்கி, பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, மாவட்ட நுாலக அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.