பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

UPDATED : நவ 08, 2024 12:00 AM
ADDED : நவ 08, 2024 10:46 AM

திண்டுக்கல்: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வினை விரைந்து நடத்திட தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது:
பல்வேறு காரணங்களால் கடந்த கல்வியாண்டிலும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. அதற்குள் நடப்பு கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகி விட்டது.
பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு கடந்த கல்வியாண்டிலே கலந்தாய்வுகள் முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் இங்கு நடத்தப்படாததால் ஆசிரியர்கள் பணி மாறுதலில் தாங்கள் விரும்பும் இடத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கலந்தாய்வினை விரைவில் நடத்துவதோடு இணைய வழியில் நடத்த வேண்டும் என்றார்.