தலைமை ஆசிரியரை மாற்ற முடிவு பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு

UPDATED : ஜூன் 25, 2024 12:00 AM
ADDED : ஜூன் 25, 2024 06:12 AM
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டி அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற கோரிய பொதுமக்கள் கோரிக்கை ஏற்பதாக தொடக்கக்கல்வி அலுவலர் உறுதி அளித்தார்.
இந்த பள்ளியில் 2023-24 கல்வியாண்டில் 8 மாணவர்கள் படித்த நிலையில் புதிய தலைமை ஆசிரியராக இந்திரா பொறுப்பேற்றார். இந்திராவின் செயல்பாடுகள் மாணவர்களுக்கு பிடிக்காத நிலையில் அவர்கள் பெற்றோர்களிடம் முறையிட்டனர். தலைமை ஆசிரியரை இடம் மாற்றக் பெற்றோர்கள் சார்பில் மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.
நடவடிக்கை இல்லாத நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குஜிலியம்பாறை தனியார் பள்ளியில் சேர்த்தனர். இதனால் பண்ணைப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகவேல் பண்ணைப்பட்டி பள்ளி சென்று ஆசிரியர்கள், மக்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் சார்பில் தலைமை ஆசிரியரை இடம் மாற்றினால் 5 மாணவர்களை நடப்பு கல்வி ஆண்டிலே சேர்த்து விடுகிறோம். அடுத்த கல்வி ஆண்டில் இன்னும் கூடுதலாக சேர்த்து விடுகிறோம் என உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் , தலைமை ஆசிரியரை இடம் மாற்றுகிறோம். நீங்கள் மாணவர்களை பள்ளியில் சேர்த்து விடுங்கள். பள்ளி நல்ல முறையில் தொடரட்டும் என்றார். ஊர் மக்கள் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது.