எதிர்பார்த்த பரிந்துரைகள் இல்லாதது ஏமாற்றமே!

UPDATED : ஜூன் 25, 2024 12:00 AM
ADDED : ஜூன் 25, 2024 06:13 AM
சென்னை:
நீதிபதி சந்துரு பரிந்துரைகள் ஏமாற்றம் அளிப்பதாக, தமிழக அரசு ஆதிதிராவிடர் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களிடையே ஜாதிப் பாகுபாடு இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்காக, உரிய பரிந்துரைகளை அளிக்குமாறு, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஒரு நபர் குழுவை, தமிழக அரசு அமைத்தது.
இதன்படி, நீதிபதி சந்துரு, 18ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் தன் குழு பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில் இடம் பெற்றிருந்த பரிந்துரைகள், பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், அதன் தலைவர் எம்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீதிபதி சந்துரு அறிக்கையில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை, மற்ற பள்ளிகளுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது நிர்வாக இயலாமையை காட்டுவதாக உள்ளது. ஜாதிய சிந்தனையில் உள்ள ஆசிரியர்கள், அதில் இருந்து விடுபடும் வகையில், உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும்.
ஜாதி தலைவர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் சீர்படுத்த வேண்டும் என்பது போன்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்த பரிந்துரைகள் ஏதும் இந்த அறிக்கையில் இல்லை.
பள்ளிக் கல்வி அமைச்சரின் நேர்முக உதவியாளர் முதல் அதிகாரிகள் வரை, பட்டியலினத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.