UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 07:49 AM

மதுரை :
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஹைக்கூ கவிதையாளர்களின் இயக்கம், இனிய நந்தவனம் மாத இதழ் சார்பில் தமிழ் ஹைக்கூக்கான 3வது உலக மாநாடு நடந்தது.
ஹைக்கூ மாநாடு எதற்காக என்ற தலைப்பில் ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் கூறியதாவது: கொரோனா காலத்தில் அச்சுப்பதிப்பக நிலையங்கள் எல்லாம் முடங்கிய நேரத்தில்தான் இப்படி ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஹைக்கூவை பற்றி பலருக்கும் தெரியாததால், இம்மாநாடு மூலம் அக்கவிஞர்களை உலகறியச் செய்ய முடிவெடுத்தோம்.
முதல் மாநாடு திருச்சியில் 2002, ஜுலை 17லும், 2வது மாநாடு அந்தமானிலும் நடந்தது. ஏனென்றால் ஒரு மாநாட்டை தமிழகத்தி லும், மற்றொரு மாநாட்டை பிற பகுதியிலும் நடத்த முடிவு செய்து இவ்வாறு செய்தோம்.
அதில் 40 கவிஞர்கள் எங்களுடன் பயணித்தனர். அதன்பின் ஹைக்கூ எழுதிய பலர் நுால்கள் வெளியிடவும் துவங்கிவிட்டனர்.
இலக்கிய கூட்டங்களுக்கு பெரும்பாலும் மக்கள் வருவதில்லை. ஆனால் இந்த மூன்றாம் உலக மாநாட்டில் 150 கவிஞர்கள் கலந்து கொண்டனர். அடுத்த மாநாட்டை இலங்கையிலும், அதன்பின் ஜப்பானிலும் நடத்த முயற்சித்து வருகிறோம் என்றார்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் கஜேந்திரன், அமுதபாரதி, ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன், சீனிவாசன், மூரா உட்பட பலர் பங்கேற்றனர்.