பள்ளிப் படிக்கட்டு அறிவின் ஏணிப்படி
பள்ளிப் படிக்கட்டு அறிவின் ஏணிப்படி
பள்ளிப் படிக்கட்டு அறிவின் ஏணிப்படி
UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 07:50 AM

திருப்பூர்:
கோடை விடுமுறை முடிந்து திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் காத்திருந்தனர். காலை இறைவணக்க கூட்டம் முடிந்து, வகுப்பறைக்கு சென்ற மாணவ, மாணவியர் சந்தித்த ஆசிரியர்கள் ஒவ்வொருவர் பெயரை கேட்டு, அறிமுகம் செய்து கொண்டனர்.
மொழித்தாள் உட்பட அனைத்து பிரிவு பாடப்புத்தகம் மதியத்துக்குள் வழங்கப்பட்டது. நோட்டுக்கள் வினியோகிக்கப்பட்டன. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி மாணவியர் ஏற்றனர்.
சமீபத்தில் பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு ஓ.டி.பி., அனுப்பப்பட்டு, வாட்ஸ்அப் எண் பெறப்பட்டு, கல்வித்துறை மூலம் பிரத்யேக வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டது. நேற்று முதல் அந்த குரூப் செயல்பட துவங்கியது. மாலையில் பள்ளி முடிந்தவுடன் அன்றைய நிகழ்வுகள், வீட்டுப்பாடம் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதன்முறை எல்.கே.ஜி.,க்கு பள்ளிக்கு வந்த குட்டீஸ் வகுப்பறையில் அமர அடம் பிடித்து அழ துவங்கினர். முதல் நாள் என்பதால் குழந்தைகளை விட்டு செல்ல பெற்றோர் தயங்கினர். அங்கன்வாடி மையங்களும் நேற்று செயல்பட துவங்கின.