Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 10ம் வகுப்பில் தவறியோருக்கு சிறப்பு வகுப்பு

10ம் வகுப்பில் தவறியோருக்கு சிறப்பு வகுப்பு

10ம் வகுப்பில் தவறியோருக்கு சிறப்பு வகுப்பு

10ம் வகுப்பில் தவறியோருக்கு சிறப்பு வகுப்பு

UPDATED : மே 04, 2024 12:00 AMADDED : மே 04, 2024 10:06 PM


Google News
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச், 26 முதல், ஏப்., 8 வரை நடந்தது.
10 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். ஆனால் அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு படித்து தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்ச்சி பெற தவறும் மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் சூழல் உள்ளது.
இதை தவிர்க்க, தேர்வு எழுதாதவர்கள், தேர்ச்சி பெற தவறிய மாணவ - மாணவியரை, பள்ளிகளுக்கு வரவழைத்து சிறப்பு வகுப்பு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக ஜூனில் நடக்க உள்ள துணை தேர்வில் பங்கேற்க வைத்து, வரும் கல்வியாண்டிலேயே கல்வியை தொடர செய்யும்படி சிறப்பு வகுப்புக்கு முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us