கல்லுாரியில் பாலியல் தொல்லை; பேராசிரியர்கள் போராட்டம்

UPDATED : ஜன 27, 2025 12:00 AM
ADDED : ஜன 27, 2025 11:28 AM
தொண்டாமுத்தூர்:
தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை தலைவர், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, கல்லூரியில் பெண் பேராசிரியர்கள், உள்ளிருப்பு போராட்டத்fதில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரியில், சுமார் 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இக்கல்லூரியில், சக்தி ஸ்ரீ என்பவர் முதல்வராக உள்ளார். இந்நிலையில், இக்கல்லூரி பேராசிரியர்கள் சிலர், நேற்று முன் தினம் மாலை, கல்லூரி வளாகத்தில் திடீரென வாயிலில் குழுமி, தமிழ்த்துறை தலைவராக பணிபுரிந்து வரும் ரமேஷ் என்பவர், பெண் பேராசிரியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்த பின் கலைந்து சென்றனர்.
பெண் பேராசிரியர்கள் கூறுகையில், தமிழ்த்துறை தலைவர் ரமேஷ், பல நாட்களாக எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். எங்கள் குடும்ப நிலை மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி, அமைதி காத்து வந்தோம்.
இருப்பினும், அவரின் தொல்லை அதிகரித்ததால், முதல்வர் மற்றும் கல்லூரிகளின் மண்டல இணை இயக்குனருக்கு புகார் தெரிவித்தோம். அவர்கள் நடத்திய விசாரணையில், எங்களுக்கு திருப்தியில்லை. நாங்கள் புகார் தெரிவித்தபோது, கல்லூரி முதல்வரும், மண்டல இணை இயக்குனரும், பேராசிரியர் ரமேைஷ அனுசரித்து செல்லுங்கள் எனக்கூறினார்கள்.
இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. நாங்கள் கூறுவதை புகாருக்குள்ளாகும் நபரிடமே தெரிவிக்கின்றனர். இதனால், முதல்வரின் தனிப்பிரிவுக்கும், மாநில பெண்கள் ஆணையத்திற்கும், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திலும், புகார் அளித்துள்ளோம்.
பேராசிரியர் ரமேஷ் இதற்கு முன் பணிபுரிந்த கல்லூரியிலும், பாலியல் புகாருக்கு உள்ளாகி பணிமாறுதல் பெற்றவர். இனியும் பொறுக்க முடியாது' என்றனர்.
இதுகுறித்து, புகாருக்குள்ளான தமிழ்த்துறை தலைவர் ரமேஷ் கூறுகையில், என் மீது புகார் தெரிவித்துள்ளவர்களுக்கு, என் மீது ஜாதி ரீதியான பாகுபாடு உள்ளது. இதனால், கூட்டு சதியில் உண்மைக்கு மாறான புகாரை தெரிவித்துள்ளனர் என்றார்.
அவரின் தொல்லை அதிகரித்ததால், முதல்வர் மற்றும் கல்லூரிகளின் மண்டல இணை இயக்குனருக்கு புகார் தெரிவித்தோம். அவர்கள் நடத்திய விசாரணையில், எங்களுக்கு திருப்தியில்லை. நாங்கள் புகார் தெரிவித்தபோது, கல்லூரி முதல்வரும், மண்டல இணை இயக்குனரும், பேராசிரியர் ரமேைஷ அனுசரித்து செல்லுங்கள் எனக் கூறினார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.