Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கோள்களின் அணிவகுப்பு அழகிய வானியல் நிகழ்வு

கோள்களின் அணிவகுப்பு அழகிய வானியல் நிகழ்வு

கோள்களின் அணிவகுப்பு அழகிய வானியல் நிகழ்வு

கோள்களின் அணிவகுப்பு அழகிய வானியல் நிகழ்வு

UPDATED : ஜன 27, 2025 12:00 AMADDED : ஜன 27, 2025 11:29 AM


Google News
மதுரை:
மதுரை லேடி டோக் கல்லுாரியில் கோள்களின் அணி வகுப்பு நிகழ்ச்சியை தொலைநோக்கி வழியே பார்வையிட இயற்பியல்துறை, ஆராய்ச்சிமையத்தின் ஜேனஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜனவரி கடைசி வாரம் முதல் பிப்ரவரியில் சில வாரங்களில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் வானியல் அதிசயம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் காண முடியும். இந்த நிகழ்வை உலகெங்கும் இருக்கும் அறிவியலாளர்கள், வானவியல் செயல்பாட்டாளர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி கலிலியோ அறிவியல் மையம் மூலம் மதுரையில் லேடி டோக் கல்லுாரியும் தொலைநோக்கி வழியே கோள்களை காண ஏற்பாடு செய்தது. பேராசியர்கள், மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர். அனுமதி கட்டணம் ரூ. 50.

மைய இயக்குனர் சத்ய மாணிக்கம் கூறியதாவது:


சமூக வலைதளம் மூலம் சில தவறான கருத்துகள் பரவி வருகிறது. ஒன்றுக்கொன்று அருகிலே வருகிறது. இதனால் இயற்கை சீற்றங்கள், உடல் உபாதைகள் ஏற்படும் என்று வருகிறது. நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது அவ்வாறுதான் இருக்கும். கோள்கள் அவற்றின் பாதையில்தான் பயணிக்கின்றன. அவை சந்திக்கும் நிகழ்வைதான் பார்க்கிறோம்.

நாம் வியாழன் கோளை உற்று நோக்கும்போது அதன் 4 நிலாக்களை காணலாம். வெள்ளிக் கோளை பார்க்கும் போது பிறை வடிவம் தெரியும். சனிக் கோளின் அழகிய வளையத்தையும் ரசிக்கலாம் என்றார்.

துறைத் தலைவர் நிம்மா எலிசபெத், ஏற்பாடுகளை பேராசிரியர் எஸ்தர் எலிசபெத் கிரேஸ் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us