Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கில முதுகலை தேர்வு எழுதிய மூத்த குடிமக்கள்

ஆங்கில முதுகலை தேர்வு எழுதிய மூத்த குடிமக்கள்

ஆங்கில முதுகலை தேர்வு எழுதிய மூத்த குடிமக்கள்

ஆங்கில முதுகலை தேர்வு எழுதிய மூத்த குடிமக்கள்

UPDATED : ஜூன் 08, 2024 12:00 AMADDED : ஜூன் 08, 2024 07:43 PM


Google News
விஜயபுரா:
மூத்த குடிமக்கள் மூவர், முதுகலை பட்டப்படிப்பு தேர்வு எழுதியதன் மூலம், கல்விக்கு வயது தடையில்லை என்பதை, இளம் சமுதாயத்தினருக்கு உணர்த்தினர்.
விஜயபுரா நகரின், ஜெ.எஸ்.எஸ்., கல்லுாரியில், நேற்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக மையத்தில், மூன்று மூத்த குடிமக்கள் எம்.ஏ., ஆங்கில பாடம் தேர்வு எழுதினர்.
பாகல்கோட், இளகல்லின், குடூராவை சேர்ந்த நிங்கய்யா, 83, சுகாதாரத்துறையில் பணியாற்றி, 24 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.
ஆனால் அவருக்கு படிப்பு மீதுள்ள ஆர்வம் குறையவில்லை. ஏற்கனவே கன்னடம், ஹிந்தி, சமூக அறிவியல் விஷயங்களில் முதுகலை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். நேற்று ஆங்கில தேர்வு எழுதினார்.
இவர் கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் புலமை கொண்டவர். கன்னடத்தில் 15 புத்தகங்கள் எழுதி, வெளியிட்டுள்ளார். விஜயபுரா, சிந்தகியை சேர்ந்த மடிவாளா, 80, பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரும் ஆங்கில முதுகலை தேர்வு எழுதினார்.
ஷிவமொகாவை சேர்ந்த நாகனகவுடா பாட்டீல், 55, கலை ஆசிரியராக பணியாற்றுகிறார். அடுத்த ஐந்து ஆண்டில் ஓய்வு பெறவுள்ளார். இவரும் எம்.ஏ., ஆங்கில தேர்வு எழுதினார்.
நிங்கையா கூறியதாவது:
வறுமையில் இருந்தாலும், 1956ல் முதல் முறையாக, ஒன்றாம் வகுப்பு தேர்வு எழுதினேன். அரசு பணியில் இருந்ததால், உயர் கல்வி பெற முடியவில்லை.
சிறு வயதில் இருந்த கல்வி ஆர்வத்தை, ஓய்வு பெற்ற பின் நிறைவேற்றுகிறேன். என் கனவு நிறைவேற, இக்னோ உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மடிவாளா கூறுகையில், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றும், எனக்கு படிப்பது, தேர்வு எழுதுவதில் எனக்கு ஆர்வம் குறையவில்லை. எப்போதும் புதுமைகளை தேட வேண்டும். என் மகள் இக்னோவில் தேர்வு எழுத விண்ணப்பித்த போது, நானும் விண்ணப்பித்தேன் என்றார்.
நாகனகவுடா பாட்டீல் கூறுகையில், படிக்கவோ, பட்டம் பெறவோ வயது தடையில்லை என்றார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us