செக்யூரிட்டி ஏஜன்சிகளிடம் ஆசிரியர்கள் நியமன பொறுப்பு

UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:23 AM
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க, செக்யூரிட்டி ஏஜன்சிக்கு டெண்டர் அளித்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரும், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்தும் 2024 - 25ம் கல்வியாண்டு முதல் கல்வித்துறை மூலமாகவே மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதாகவும், அடிப்படை வசதிகளை செய்வதாகவும் உறுதி அளித்திருந்தனர்.
ஆசிரியர்கள் எதிர்ப்பு
இதற்கு மாநகராட்சி பள்ளிகளில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டத்துக்கு பணியாத அரசும், மாநகராட்சி தலைமை கமிஷனரும் 'மாநகராட்சி பள்ளிகளில், தகுதியற்ற ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்கள் தேவையில்லை. கல்வித்துறையில் இருந்தே புதிய ஆசிரியர்கள் வருவர். இப்போது பணியில் உள்ளவர்கள், தகுதி இருந்தால் நியமிக்கப்படலாம். நியமனத்தில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என கூறினர்.
ஆனால் மாநகராட்சி பள்ளிகளுக்கு கல்வித்துறை மூலமாக, ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதற்கு முன் ஆசிரியர்களை நியமிக்கும் டெண்டர் பெற்றிருந்த, செக்யூரிட்டி ஏஜன்சிகளிடம், 2024 - 25ம் கல்வி ஆண்டிலும் ஆசிரியர்களை நியமிக்கும்படி மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
யார், யாருக்கு?
தெற்கு மண்டலம், ஆர்.ஆர்.நகர் மண்டலத்துக்கு அப்பு டிடெக்டிவ் அண்ட் செக்யூரிட்டி சர்வீஸ், கிழக்கு மண்டலத்துக்கு, 'டிடெக்ஸ் அண்ட் செக்யூரிட்டி சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்', மேற்கு மண்டலத்துக்கு, 'ஷார்ப் வாட்ச் இன்வெஸ்டிங் செக்யூரிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' ஏஜன்சிக்கு, ஆசிரியர்களை நியமிக்கும் டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஜன்சிகள், ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பி, ஆவணங்களை தாக்கல் செய்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் படி கூறுகின்றன.
வீடுகள், நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்கும் ஏஜன்சிகளிடம், ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை அளித்த, மாநகராட்சியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பா.ஜ.,வின் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறியதாவது:
டிடெக்டிவ், செக்யூரிட்டி ஏஜன்சிகள் மூலமாக, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தை, துணை முதல்வர், மாநகராட்சி தலைமை கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தேன். இது குறித்து, ஆய்வு செய்வதாக அவர்கள் கூறினர். ஏஜன்சி மூலமாக ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்தினர்.
அவசர உத்தரவு
ஆனால் மீண்டும், அதே செயலை செய்கின்றனர். ஆசிரியர்களை நியமிக்கும்படி, செக்யூரிட்டி ஏஜன்சிகளுக்கு அவசர, அவசரமாக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இப்படி செய்தால், கல்வித்துறை எப்படிப்பட்ட சூழ்நிலைக்கு செல்லும்.
சாலை பணிகளை செய்ய விளையாட்டு சாதனங்களை வினியோகிக்க நிர்ணயித்த ஒப்பந்ததாரர்களுக்கு, டெண்டர் அளிப்பர். எதன் அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை, செக்யூரிட்டி ஏஜன்சிகளிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.