58 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி

UPDATED : ஜன 27, 2025 12:00 AM
ADDED : ஜன 27, 2025 11:33 AM

பல்லாவரம்:
பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், 58 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், எச்.சி.எல்.,- மறைமலை அடிகள் பள்ளி - இளம் கலாம் அறிவியல் மையம் இணைந்து, ஒரு நாள் அறிவியல் கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என, 58 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
மாணவர்களின் படைப்புகள், 6-7 வகுப்பு, 8-9 வகுப்பு என, இரண்டு பகுதிகளாக பிரித்து காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை, 2வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, ரொக்கப் பரிசு வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.