Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதரவற்ற மாணவர் தங்கி படிக்க ராமகிருஷ்ணா மிஷன் வசதி

ஆதரவற்ற மாணவர் தங்கி படிக்க ராமகிருஷ்ணா மிஷன் வசதி

ஆதரவற்ற மாணவர் தங்கி படிக்க ராமகிருஷ்ணா மிஷன் வசதி

ஆதரவற்ற மாணவர் தங்கி படிக்க ராமகிருஷ்ணா மிஷன் வசதி

UPDATED : ஏப் 20, 2024 12:00 AMADDED : ஏப் 20, 2024 11:19 AM


Google News
Latest Tamil News
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில், ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட உள்ளது.

மாணவர் இல்லத்தின் செயலர் சத்யஞானானந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மயிலாப்பூரில், 119 ஆண்டுகளாக இயங்கும் பாரம்பரியமுள்ள கல்வி நிலையமாக ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் உள்ளது. இங்கு, தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்து வறுமையில் வாடும் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, ஆறாம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. அவர்களுக்கு உறைவிட பள்ளியில் தமிழ் வழி கல்வி இலவசமாக அளிக்கப்படும்.

அதேபோல், 10ம் வகுப்பில் தவறிய, அதேநேரம் 50 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் ஆகிய பிரிவுகளில் முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்பில் சேரலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு டிப்ளமா படிப்பில் சேரலாம். இந்த படிப்புகளில் சேர, www.rkmshome.org.in/admissions என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், 66, சர் பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை- 4 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044 -- 2499 0264, 4210 7550 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது chennai.studentshomerkmm.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us