Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல் ஓட்டு பதிவால் முதல் வாக்காளர்கள் பெருமிதம்

முதல் ஓட்டு பதிவால் முதல் வாக்காளர்கள் பெருமிதம்

முதல் ஓட்டு பதிவால் முதல் வாக்காளர்கள் பெருமிதம்

முதல் ஓட்டு பதிவால் முதல் வாக்காளர்கள் பெருமிதம்

UPDATED : ஏப் 20, 2024 12:00 AMADDED : ஏப் 20, 2024 11:23 AM


Google News
Latest Tamil News
ஓட்டு விற்பதற்கு அல்ல

ஹர்ஷலதா,தனியார் ஊழியர்,திண்டுக்கல்: முதன் முதலில் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஓட்டு என்பது பணத்திற்கு விற்பது அல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க இளைய சமுதாயம் பங்காற்ற வேண்டும்.
பெருமையாக உணர்கிறேன்

சீ. அபிராமி, கல்லுாரி மாணவி-, கே.அய்யாபட்டி:

முதன் முதலாக ஓட்டளித்து ஜனநாயக கடமை ஆற்றியது மகிழ்ச்சி , புது அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் அனைத்து துறையிலும் லஞ்சம் என்பது கண்கூட தலைவிரித்தாடுகிறது. மது , பல்வேறு போதை வஸ்துகளின் தாராள விற்பனையால் இளைஞர்கள், இளம் தலைமுறையினர்கள் அடிமையாகி உள்ளனர். இதன் பாதிப்பிலிருந்து விடுபட முதல் ஓட்டை பதிவு செய்ததன் மூலம் கடமையை ஆற்றிய பெருமையாக உணர்கிறேன்.
காத்திருந்து ஓட்டளித்தேன்

ஜி. யுவராணி, கல்லூரி மாணவி, வடமதுரை:
ஓட்டு சாவடிகளில் என்ன நடைமுறை உள்ளது என்பதை பெற்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். மற்ற வாக்காளர்களுடன் 45 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தேன்.

இந்தியா பிரஜை என்ற முறையில் என்னுடைய ஜனநாயக கடமையை செய்த திருப்தி ஏற்பட்டது. வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு வழங்கும் நடைமுறைகள் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதில் சிறிது ஏமாற்றமாக உள்ளது.
ஜனநாயக கடமையால் மகிழ்ச்சி

ரமேஷ் கண்ணன், தனியார் ஊழியர் ,மன்னவனுார் :
முதல் முறையாக ஓட்டளித்தது ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.பொருளாதாரத்தில் நாடு வளர்ச்சி அடையவும், ஊழல், லஞ்சமற்ற ஆட்சி அமைவது, மக்கள் சிந்தனைகளை மாற்றும் இலவச அறிவிப்புகளால் அடிமைத்தனமாக்கும் போக்கை மாற்றும் சிந்தனையுடையவர்கள் தலைமை ஏற்க வேண்டும். மக்களை தன்னம்பிக்கையுடன், சுய வாழ்க்கையில் பொருளாதார உயர்வு அமைக்க உதவி பெறும் அரசு அமைய வேண்டும் என்பதே என் போன்ற இளைய தலைமுறையினரின் நோக்கமாக உள்ளது.
அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்

ஜெய் ரத்தோர்,கல்லுாரி மாணவர், பழநி: முதல்முறையாக இந்திய அரசின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் ஓட்டளித்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கும் சமுதாய பொறுப்பும், கடமையும் ஏற்பட்டுள்ளது. சிறந்த வாக்காளராக இனி வரும் தேர்தல்களில் தொடர்ந்து எனது ஓட்டை பதிவு செய்ய உள்ளேன். நல்ல தலைமுறையை உருவாக்க சிறந்த தலைவர்களுக்கு எனது ஆதரவை தொடர்ந்து வழங்க உள்ளேன். அனைவரும் அனைத்து தேர்தல்களிலும் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டளித்த பின் கையில் வைக்கப்பட்ட மையை போட்டோ எடுத்து அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன்.
பொறுப்புணர்வு மேலோங்கியது

கே.பாலநிஷாந்த், கல்லுாரி மாணவர், ஒட்டன்சத்திரம் :
முதல் முறை ஓட்டளிக்க போகிறோம் என்று உணர்வே மிகவும் பெருமிதமாக இருந்தது. முதல் முறை ஓட்டளித்தது ஒரு பொறுப்பு மிக்க குடிமகனாக மாறிய உணர்வை அளித்தது. நாமும் சமுதாயத்தில் முடிவெடுக்கும் மனிதனாக மாறி ஜனநாயக கடமை நிறைவேற்றி உள்ளோம் என்ற பொறுப்புணர்வு மேலோங்கி நின்றது. ஓட்டளிக்கும் முறை எளிதாக இருந்தது. வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு , இணையதள சேவை மூலம் அனைத்து மக்களும் வீட்டில் இருந்து ஓட்டுகளை செலுத்தி வேட்பாளரை தேர்வு செய்யும் முறை வெகு தொலைவில் இல்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us