பொதுத்தேர்வு ஆயத்தம்; பள்ளிகளில் ஆய்வு
பொதுத்தேர்வு ஆயத்தம்; பள்ளிகளில் ஆய்வு
பொதுத்தேர்வு ஆயத்தம்; பள்ளிகளில் ஆய்வு
UPDATED : ஜன 27, 2025 12:00 AM
ADDED : ஜன 27, 2025 11:37 AM

திருப்பூர்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்கியுள்ள நிலையில், முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் பள்ளிவாரியாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளது. தற்போது, இறுதிக்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பிப்., முதல் வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கவுள்ளது. இதற்காக ஆய்வகம், கம்ப்யூட்டர் அறைகள் தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது.
பொதுத்தேர்வுக்கு பள்ளிகள் தயாராகி விட்டனவா; மாணவ, மாணவியரின் மனநிலை எப்படி; மொழி மற்றும் முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடங்களை முடித்து விட்டு, எத்தனை முறை மாதிரி மற்றும் திருப்புதல் தேர்வுகள் நடத்தி யுள்ளனர்; தலைமை ஆசிரியர் - வகுப்பாசிரியரின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) உதயகுமார் தலைமையிலான மாவட்ட கல்வி அதிகாரிகள் குழு, ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளி வாரியாக ஆய்வு செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.
பாடவாரியாக ஆசிரியர்களைச் சந்தித்து மாணவ, மாணவியருக்கு பாடங்களை எவ்வாறு கற்பித்துள்ளீர்கள் என்று கேட்டறிந்து வருகின்றனர்.
பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று திருப்பூர் சாதித்து காட்டியது. சாதனை தொடர தேவையான கல்வி பணிகளை உத்வேகத்துடன் மேற்கொள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடவாரியாக தேர்ச்சி சதவீதம் எட்டப்பட்டு விட்டாலே, குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து விடும். இன்னமும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியர் மீது கூடுதல் அக்கறை செலுத்த தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது என சி.இ.ஓ., உதயகுமார் கூறினார்.