பத்ம விருதுகள் 2025: தமிழ்நாட்டில் 13 பேர் பெறுகின்றனர்

UPDATED : ஜன 27, 2025 12:00 AM
ADDED : ஜன 27, 2025 05:49 PM
சென்னை:
2025-ம் ஆண்டிற்கான 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள், இந்த பட்டியலில் வெளிநாட்டினர் / வெளிநாடுவாழ் இந்தியர் / பிஐஓ / ஓசிஐ பிரிவைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெறும் 13 பேரும் அடங்குவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு நல்லி குப்புசாமி செட்டிக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவிலும் திரு ஏ அஜித்குமார், திருமதி ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு கலைப் பிரிவிலும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
கலைக்கான பத்மஸ்ரீ விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு புரிசை கண்ணப்ப சம்பந்தம், திரு குருவாயூர் துரை, திரு ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு வேலு ஆசான் புதுச்சேரியைச் சேர்ந்த திரு பி. தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், கல்வி, இதழியல் பிரிவில் திரு லட்சுமிபதி ராமசுப்பையர், சமையல் பிரிவில் திரு கே தாமோதரன், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் திரு எம் டி ஸ்ரீனிவாஸ், விளையாட்டுகள் பிரிவில் திரு ஆர் அஸ்வின், வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் திரு ஆர் ஜி சந்திரமோகன், இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவில் திரு சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.