பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு செயல்திட்ட விளக்க ஆயத்த கூட்டம்

UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:35 AM
கள்ளக்குறிச்சி:
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான செயல்திட்ட ஆயத்த கூட்டம் சி.இ.ஓ., தலைமையில் நேற்று நடந்தது.
மாவட்ட கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சி,இ,ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். டி.இ.ஓ., ரேணுகோபால், உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் தண்டபாணி, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல, உண்டு உறைவிட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான கூட்டத்தில், மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டும். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை வரும் கல்வி ஆண்டில் உயர்த்த வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , இடிக்கப்பட்ட வேண்டிய கட்டடங்கள் ஆகியவற்றை காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் செய்திடவேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள பட்டுபோன மரங்களை அகற்றவும், மழைநீர் தேங்காமல் இருத்தலை உறுதி செய்யவும், பள்ளிகள் தோறும் மாணவர் மனசு பெட்டி முறையாக பராமரிக்கவும், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பித்தல், புதியதாக எடுத்தல் மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கு துவங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்திற்கு பதிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இணைய தளத்தில் அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டது.