முதுநிலை மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள்: விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அறிவுறுத்தல்

UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:36 AM
கோவை:
முதுநிலை மாணவர்களுக்கான பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.
பாரதியார் பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், முதுநிலையில், பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில், மாணவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் பருவத்தேர்வுகள் நடத்தப்படும்.
இந்நிலையில், பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முதுநிலை மற்றும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ.,(ஐ.பி.,) ஆகிய பாடப்பிரிவுகளில், பயிலும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க, https://coe.b--u.ac.in/coll_pg/login,aspx என்ற இணைப்பை பயன்படுத்தலாம். மாணவர்கள் நடப்பு பருவத்துக்கான எழுத்து மற்றும் செய்முறை தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
வரும் 10ம் தேதிக்குள் அபராதம் இன்றியும், ரூ.50 அபராதத்துடன் வரும், 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பதிவிறக்கம் செய்யப்பட்ட நகலை, அந்தந்த கல்லுாரி முதல்வரிடம், வரும் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தந்த கல்லுாரிகளில் பயின்று, தேர்வில் தோல்வி அடைந்த தனியார் மாணவர்கள் விண்ணப்பிக்க, கல்லுாரி முதல்வர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.