Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி.,

ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி.,

ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி.,

ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி.,

UPDATED : செப் 25, 2024 12:00 AMADDED : செப் 25, 2024 06:31 PM


Google News
Latest Tamil News
மேலாண்மை கல்வி வழங்குவதில் சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அகமதாபாத்தில், உதவித்தொகையுடன் கூடிய பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைகள்:
பொருளாதாரம், நிதி மற்றும் கணக்கியல், உணவு மற்றும் வேளாண் வணிகம், மனித வள மேலாண்மை, இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், இனோவேஷன் அண்டு மேனேஜ்மெண்ட் இன் எஜுகேஷன், மார்க்கெட்டிங், ஆப்ரேஷன்ஸ் அண்டு டிசிசன் சயின்சஸ், ஆர்கனிஷேனல் பிகேவியர், பப்ளிக் சிஸ்டம்ஸ், ஸ்டேரடஜி

தகுதிகள்:
* குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பிற்கு பிறகான முதுநிலை பட்டப்படிப்பு அல்லது இரண்டு ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பு.

* 12ம் வகுப்பிற்கு பிறகான 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டப்படிப்புடன் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் சி.ஏ., சி.எஸ்., சி.எம்.ஏ., ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

* குறைந்தது 65 சதவீத மதிப்பெண்களுடன் நான்கு ஆண்டு அல்லது எட்டு செமஸ்டர் இளநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இவைதவிர, கேட் எனும் காமன் அட்மிஷன் டெஸ்ட், ஜிமேட் எனும் கிராஜுவேட் மேனேஜ்மென்ட் ஆப்டிட்யூட் டெஸ்ட் போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.

உதவித்தொகை: மாதம் ரூ. 42 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவைதவிர, புத்தகம், மாநாட்டிற்கு சென்று வரும் செலவு என பல்வேறு செலவீனங்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iima.ac.in/academics/phd/admission எனும் கல்வி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சம் இரண்டு முனைவர் பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ.500; இதர பிரிவினருக்கு ரூ. 250

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 20, 2025.

விபரங்களுக்கு:
https://www.iima.ac.in/academics/phd







      Our Apps Available On




      Dinamalar

      Follow us