UPDATED : செப் 25, 2024 12:00 AM
ADDED : செப் 25, 2024 06:38 PM

கடந்த 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய அரசின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான டி.ஏ.இ., எனும் அணு சக்தி துறை, மாணவர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்புகளையும் வழங்குகிறது.
முக்கியத்துவம்
தூய்மையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல் அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் புதுமைகளை வளர்ப்பதன் வாயிலாக இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அணு சக்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 6 ஆராய்ச்சி மையங்கள், 3 தொழில்துறை நிறுவனங்கள், 5 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 3 சேவை அமைப்புகள் செயல்படுகின்றன. மேலும், அடிப்படை ஆராய்ச்சிகளுக்காக 11 நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
பிரதான நோக்கம்
* சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வழியில் மின்சாரம் தயாரிக்க அணுசக்தியைப் பயன்படுத்துதல்.
* அணு அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் ஆராய்ச்சி மூலம் அறிவியல் அறிவை மேம்படுத்துதல்.
* மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் சிகிச்சைகள்; குறிப்பாக புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு மற்றும் ஐசோடோப்புகளைப் பயன்படுத்துதல்.
* பயிர் விளைச்சலை மேம்படுத்த அணு உத்திகளைப் பயன்படுத்துதல், கதிர்வீச்சு மூலம் உணவைப் பாதுகாத்தல் மற்றும் மேம்பட்ட தொழில்துறை பொருட்களை உருவாக்குதல்.
* தேசிய பாதுகாப்பிற்கான அணு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குதல்.
முக்கிய அமைப்புகள்
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் - என்.பி.சி.ஐ.எல்.,:
இந்தியாவில் அணுமின் நிலையங்களை வடிவமைத்தல், கட்டமைத்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றிற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்கிறது. பல அணுமின் நிலையங்களை இயக்கும் என்.பி.சி.ஐ.எல்., நாட்டின் மின்சார தேவையை போக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
பாபா அணு ஆராய்ச்சி மையம் - பி.ஏ.ஆர்.கே.,:
டி.ஏ.இ.,வின் கீழ் உள்ள முதன்மை ஆராய்ச்சி நிறுவனமான திகழும் இம்மையம், அணு அறிவியல், அணு உலை தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஐசோடோப்பு மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதோடு அணு ஆயுத திட்டத்திலும் செயல்படுகிறது.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் - ஐ.ஜி.சி.ஏ.ஆர்.,:
வேகமான உலைகள் மற்றும் எரிபொருள் சுழற்சிகளில் மேம்பட்ட ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு மினரல் இயக்குநரகம் - ஏ.எம்.டி.இ.ஆர்.,:
யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற அணு மின் உற்பத்திக்கான கனிம வளங்களைக் கண்டறிந்து மதிப்பிடும் பணியை மேற்கொள்கிறது.
விபரங்களுக்கு:
https://dae.gov.in/