Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செவிலியர்களுக்கு அந்நிய நாட்டு மொழி பயிற்சி பெற வாய்ப்பு

செவிலியர்களுக்கு அந்நிய நாட்டு மொழி பயிற்சி பெற வாய்ப்பு

செவிலியர்களுக்கு அந்நிய நாட்டு மொழி பயிற்சி பெற வாய்ப்பு

செவிலியர்களுக்கு அந்நிய நாட்டு மொழி பயிற்சி பெற வாய்ப்பு

UPDATED : மே 21, 2024 12:00 AMADDED : மே 21, 2024 10:01 AM


Google News
Latest Tamil News
நாமக்கல்:
செவிலியர்கள் அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற வசதியாக, அந்நிய நாட்டு மொழிகள் பயிற்சி பெற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


வெளிநாடுகளில் வேலை செய்ய விருப்பமுள்ள செவிலியர்களுக்கு, அயல்நாட்டு மொழிகளான ஜெர்மன், ஜப்பான் போன்ற மொழிகளை இலவசமாக பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போது அயல்நாடுகளில் செவிலியர்களுக்கான பணியிடங்கள் மற்றும் தேவைகள் அதிகரித்துள்ளது. அயல்நாடுகளான ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வசதியாக அயல்நாட்டு மொழிகளை இலவசமாக கற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற ஓஎம்சிஎல் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் செவிலியர்கள் இப்பயிற்சி குறித்த தங்களது சந்தேகங்களை, வாட்ஸாப் எண், 63791 79200 மற்றும் அலுவலக தொலைபேசி எண்களில், 044-22502267, 22505886 தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us