பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோடை கால புத்துணர்வு நிகழ்ச்சி

UPDATED : மே 21, 2024 12:00 AM
ADDED : மே 21, 2024 10:02 AM

அவிநாசி:
திருமுருகன்பூண்டியில் குழந்தைகளுக்கான கோடைக்கால புத்துணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமுருகன்பூண்டியில் விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை நான்காம் ஆண்டு மாணவிகள் 10 பேர், கள ஆய்வு பயிற்சியில் கலந்துகொண்டனர். கோடைக்கால புத்துணர்வு நிகழ்ச்சியாக விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை மூலம் பள்ளி செல்லும் குழந்தைகளை மகிழ்வித்தனர்.
விழுதுகள் திட்ட மேலாளர் சந்திரா தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, மீனா ஆகியோர் குழந்தைகளுக்கு கதைகள் மற்றும் பாடல்களை பாடி புத்துணர்வு அளித்தனர். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 45 குழந்தைகள் பங்கேற்றனர்.