Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வுகளில் வெற்றி பெற செய்தித்தாள் வாசிப்பு அவசியம்: சப் - கலெக்டர் அறிவுரை

போட்டி தேர்வுகளில் வெற்றி பெற செய்தித்தாள் வாசிப்பு அவசியம்: சப் - கலெக்டர் அறிவுரை

போட்டி தேர்வுகளில் வெற்றி பெற செய்தித்தாள் வாசிப்பு அவசியம்: சப் - கலெக்டர் அறிவுரை

போட்டி தேர்வுகளில் வெற்றி பெற செய்தித்தாள் வாசிப்பு அவசியம்: சப் - கலெக்டர் அறிவுரை

UPDATED : மே 16, 2024 12:00 AMADDED : மே 16, 2024 10:26 AM


Google News
மாமல்லபுரம் :
செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில், நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, நேற்று, பையனுார் ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.

சப் - கலெக்டர் நாராயணசர்மா, மாணவ - மாணவியருக்கு, கல்லுாரிக் கனவு வழிகாட்டி கையேடு வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:
இந்நிகழ்ச்சியை, ஓரிடத்தில் மட்டுமின்றி, இன்னும் சில இடங்களில் நடத்த, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். உங்களுக்கான கையேடு புத்தகத்தில், பாடப்பிரிவுகள், கல்லுாரி விபரங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.
அதை முழுமையாக படித்து, சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் தான் உங்களுடைய ஆர்வம் பற்றி, உங்களுக்கு தெரியும். உங்களுக்கு ஆர்வம் உள்ள படிப்பையே, நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

சமூக ஊடகங்களில் பேசப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி ஆர்வம் ஏற்பட்டால், அது குறித்த குறிப்புகளை தேடவேண்டும். ஆர்வம் உள்ள துறைகளில், எந்தெந்த பாடப்பிரிவுகள், எந்தெந்த கல்லுாரியில் உள்ளன என்பதை அறிந்து, நன்றாக படிக்க வாய்ப்புள்ள கல்லுாரியில் படிக்க வேண்டும்.

பெற்றோர், உறவினர், நண்பர்கள் கூறுவதை ஏற்காமல், உங்கள் ஆர்வத்தை கருத்திற்கொண்டு, நீங்களே முடிவெடுக்க வேண்டும். பொதுச் சேவை பணிகளில் விருப்பம் என்றால், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது அவசியம். இத்தேர்வு ஆண்டுதோறும் மாறுகிறது. காரணம் எழுதுவோர் அதிகரிக்கின்றனர். அதற்கேற்ப தயாராக இருக்கவேண்டும்.

தினமும் செய்தித்தாள்கள் படித்தால் தான், அதற்கு தயாராக முடியும். நம்மை சுற்றி நடப்பது குறித்து, நாம் விழிப்புணர்வாக இருக்க முடியும். செய்தித்தாள் படிப்பது அவசியம். டேட்டா சயின்ஸ் என்பது வேகமாக வளரும் துறை. சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், 30,000 ரூபாயில், ஆன்லைனில் பவுண்டேஷன் சர்டிபிகேட் படிப்பை வழங்குகிறது.

நுழைவுத்தேர்வு மட்டும் எழுதி, இப்படிப்பில் சேரலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, அரசே கட்டணம் செலுத்தி உதவு கிறது. படிப்பு குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us