நீட் தேர்வு முறைகேடு புகார்; சி.பி.ஐ., விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 10:37 AM
புதுடில்லி:
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து மத்திய அரசு விரிவான விசாரணைக்காக சி.பி.ஐ., விசாரணைக்கு ஜுன் 22ல் உத்தரவிட்டது
மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் மே 5ல் நாடு முழுவதும் 4,700க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
ஜுன் 4ல் நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன.இதில் 67க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றிருந்தனர். அவர்களில் சிலர் ஒரே நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார்கள் எழுந்ததையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் இவ்விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுகிறது.
நீட் தேர்வு முறைகேடு புகாரில் காவல்துறையின் விசாரணையில் பீகாரில் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.