Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகும்: அமைச்சர் உதயநிதி பேச்சு

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகும்: அமைச்சர் உதயநிதி பேச்சு

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகும்: அமைச்சர் உதயநிதி பேச்சு

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகும்: அமைச்சர் உதயநிதி பேச்சு

UPDATED : மார் 27, 2024 12:00 AMADDED : மார் 27, 2024 11:26 AM


Google News
Latest Tamil News
உசிலம்பட்டி:
மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார்.உசிலம்பட்டியில் தேனி லோக்சபா தி.மு.க., வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவு திரட்டி அமைச்சர் உதயநிதி பிரசாரத்தில் பேசியதாவது:
பிரதமர் மோடி எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். அப்படியே கிடக்கிறது. பேசும்போது திருக்குறள் எல்லாம் கூறுவார். ஆனால் தமிழ்வளர்ச்சிக்கு உதவவில்லை. மழை வெள்ளம் வந்த போது வந்து பார்க்க வில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து பார்த்தார். ஆனால் நிதியுதவி கொடுக்கவில்லை.ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்தனர். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். தமிழகத்தில் உள்ள அனைத்து டோல்கேட்களையும் மூடுவோம்.காஸ், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். அ.தி.மு.க.. ஐ.பி.எல் அணிகளைப் போல் உள்ளது. தங்கத்தமிழ் செல்வனை 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தால் மாதம் இரண்டு நாள் தேனிக்கு வந்து உங்களுடன் தங்குவேன் என பேசினார்.பிறந்தாள் பரிசு
திருமங்கலம் தேவர் சிலை அருகே பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4 லட்சத்து 71 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார். ஒரு லட்சத்து 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தற்போது அவரை இரண்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஜூன் 3 ல் கருணாநிதியின் நூற்றாண்டு விழா. ஜூன் 4ல் லோக்சபா தேர்தலுக்கான முடிவுகள். எனவே தேர்தல் வெற்றியை கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக தர வேண்டும் என்றார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us