Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயனுள்ளதாக இருந்தது

பயனுள்ளதாக இருந்தது

பயனுள்ளதாக இருந்தது

பயனுள்ளதாக இருந்தது

UPDATED : மார் 27, 2024 12:00 AMADDED : மார் 27, 2024 11:30 AM


Google News
Latest Tamil News
கோவை:
தினமலர் நாளிதழ் நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சி, எந்த படிப்பை, எந்த கல்லுாரியில் படிக்கலாம், படிப்புகளுக்கான எதிர்கால வாய்ப்புகளை தெளிவாக விளக்கியதாக, பங்கேற்ற மாணவ மாணவியர், பெற்றோர் தெரிவித்தனர்.ஒரே இடத்தில் அத்தனையும்
முன்பெல்லாம் இதுபோன்ற வழிகாட்டி நிகழ்ச்சி எல்லாம் இல்லை. ஏதாவது நமக்குத் தெரிந்த படிப்பை படிப்போம். ஆனால், இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இன்றைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற படிப்புகள், திறன் பயிற்சிகள், வேலைவாய்ப்புகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.- ஸ்ரீதேவி, பெற்றோர், கோவை.மிகவும் பயனுள்ளது
ஏ.ஐ., சி.எஸ். பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்துதான் வந்தேன். ஆனால், நிறைய புதிய படிப்புகள் குறித்தும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வழிகாட்டி நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.- பிரகதீஷ், மாணவர், திருப்பூர்.நுழைவுத்தேர்வுகள் ஏராளம்
நிறைய புதுப் புது துறைகள், அதில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து தெரிந்து கொண்டேன். எந்த துறையை தேர்ந்தெடுத்தால் என்ன வேலைவாய்ப்பு, கூடுதலாக என்ன பயிற்சிகளைப் படிக்கலாம். நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என, தெரிந்து கொண்டேன். ஒரே கூரையின் கீழ் இவ்வளவு கல்லூரிகளை இணைத்து, அறிய வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு நன்றி.- தீபிகா, மாணவி, கோவை.பல்வேறு துறைகள்
என்ன படிப்பை எனது மகளைப் படிக்க வைக்கலாம் என்ற குழப்பமான மனநிலையில் இருந்தோம். ஆனால், இப்போது நல்ல ஒரு தெளிவு கிடைத்துள்ளது. எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நல்ல வேலைவாய்ப்பு, எதிர்காலம் உள்ளது என தெரிந்து கொண்டோம். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.- சுமித்ராதேவி, பெற்றோர், கோவை.பாதுகாப்பு துறை படிப்புகள்
புதுவிதமான நிறைய படிப்புகள் குறித்து தெரியவந்துள்ளது. பாதுகாப்புத் துறை குறித்தெல்லாம் முன்பு எனக்குத் தெரியாது. ஆனால், அதில் பெண்களுக்கு இவ்வளவு நல்ல எதிர்காலம் உள்ளது எனத் தெரிந்து கொண்டேன். இந்த கருத்தரங்கு நிச்சயமாக மாணவ, மாணவிகளின் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.- ஐஸ்வர்யா, மாணவி, வெள்ளலூர்.தெளிவு இல்லாமலிருந்தேன்
எந்த துறையை என் மகளுக்குத் தேர்வு செய்வது என்ற, எந்தவொரு தெளிவும் இல்லாமல் இருந்தேன். கருத்தரங்கில் நிறைய புதிய படிப்புகள், அதில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து தெரிந்து கொண்டோம். மற்றவர்களுடன் நம் பிள்ளைகளை ஒப்பிடக் கூடாது என்ற புரிதல் கிடைத்துள்ளது. கருத்தரங்கு மிகவும் உபயோகமாக இருந்தது.- சித்ரா, பெற்றோர், வெள்ளலூர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us