ஒரே நாளில் பட்டம் பெற்ற தாய் - மகன்
ஒரே நாளில் பட்டம் பெற்ற தாய் - மகன்
ஒரே நாளில் பட்டம் பெற்ற தாய் - மகன்
UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 11:47 AM
பெங்களூரு:
பெங்களூரின், சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் ரஞ்சனி நிரஞ்சன், 48, பிஎச்.டி., பட்டமும், அவரது மகன் ராகவா, 22, எஸ்.என்.எம்., டெக் பட்டமும் பெற்றனர்.
ரஞ்சனி: என் மகனுடன், நானும் பட்டம் பெற்றதற்கு, மகிழ்ச்சி. இது எங்கள் குடும்பத்தின் சாதனை. அனைவருக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. என்னை விட, 13 வயது சிறிய மாணவர்களுடன் வகுப்பில் அமர்ந்திருந்தது, ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. நாளடைவில் சரியானது.
ராகவா: என் தாயார் பாடத்தில் சந்தேகங்களை, என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார். குறிப்பாக கணிதம் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு விளக்கம் கேட்பார். தாயுடன் பட்டம் பெற்றது, எனக்கு பெருமையான விஷயம். இச்சாதனைக்கு, என் தந்தையின் ஊக்கமே காரணம். எங்களுக்கு முதுகெலும்பாக இருந்தார்.