செமஸ்டர் விடைத்தாள் திருத்தம் தாமதம்; சென்னை பல்கலை மாணவர்கள் தவிப்பு

UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 11:50 AM
சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களிலுள்ள, அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லுாரிகள், சென்னை பல்கலையின் கீழ் இணைப்பு அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன.
இவற்றில் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள், தாங்களே பாடத்திட்டம் அமைத்து தேர்வுகள் நடத்தி, விடைத்தாள் திருத்தம் செய்து சான்றிதழ்கள் அளிக்கின்றன.
சான்றிதழ் வழங்கின
தற்காலிக பட்ட சான்றிதழ் மற்றும் பட்டமளிப்பு விழா சான்றிதழ் மட்டும், சென்னை பல்கலையால் வழங்கப்படுகிறது.
தன்னாட்சி அந்தஸ்து பெறாத, 70க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, சென்னை பல்கலை தேர்வுத்துறை சார்பில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் இறுதி செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரலில் நடத்தப்பட்டன.
இந்த தேர்வின் விடைத்தாள்களை, தன்னாட்சி பெற்ற கல்லுாரிகள் விரைந்து மதிப்பீடு செய்து, ஜூன் மாதமே தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மதிப்பெண் சான்றிதழும் வழங்கி விட்டன. ஆனால், தன்னாட்சி பெறாத கல்லுாரிகளின் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை, சென்னை பல்கலை இன்னும் மதிப்பீடு செய்து முடிக்கவில்லை.
தேர்வுக்கு பின், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாக துவங்கியதால், தேர்வு முடிவுகள் தாமதமாகி சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், இளநிலை பட்டப்படிப்பு முடித்து, இறுதி செமஸ்டர் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு, முதுநிலை படிப்பில் சேர்வதற்கு, மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தற்காலிக சான்றிதழ் தேவைப்படுகிறது.
கடும் பாதிப்பு
குறிப்பாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில், முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் முடிய உள்ள நிலையில், சென்னை பல்கலை மாணவர்கள் தேர்வு முடிவு கூட இன்னும் தெரியாமல், கடும் பாதிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.
எனவே, உயர் கல்வித்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சென்னை பல்கலையின் விடைத்தாள் திருத்தப் பணிகளை துரிதப்படுத்துவதுடன், சான்றிதழ்களையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்து உள்ளனர்.