Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மினியேச்சர் சாட்டிலைட் உருவாக்கி பறக்கவிட்ட எம்.சி.சி., மாணவர்கள்

மினியேச்சர் சாட்டிலைட் உருவாக்கி பறக்கவிட்ட எம்.சி.சி., மாணவர்கள்

மினியேச்சர் சாட்டிலைட் உருவாக்கி பறக்கவிட்ட எம்.சி.சி., மாணவர்கள்

மினியேச்சர் சாட்டிலைட் உருவாக்கி பறக்கவிட்ட எம்.சி.சி., மாணவர்கள்

UPDATED : பிப் 05, 2025 12:00 AMADDED : பிப் 05, 2025 08:59 AM


Google News
Latest Tamil News
சென்னை :
சென்னை கிறிஸ்துவ கல்லுாரி மேல்நிலை பள்ளி மாணவர்கள், மினியேச்சர்சாட்டிலைட்டுகளை உருவாக்கி, விண்ணில் பறக்க விட்டனர்.

சென்னை, சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி., மேல்நிலை பள்ளியில், சேலத்தைச் சேர்ந்த, விங்க்ஸ் ஆப் சயின்ஸ் எனும் அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பில், சாட்டிலைட்டுகளை உருவாக்குவது குறித்த பயிற்சி நேற்று நடந்தது.

தலா 10 மாணவர்கள் இணைந்த ஆறு குழுவினர், 50 கிராம் எடையுள்ள சாட்டிலைட்டுகளை உருவாக்கினர்.

அதில், காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை, புற ஊதாக்கதிர்கள் மற்றும் புவியின் காந்தப்புல தன்மை, ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட வாயுக்களின் சதவீதம் உள்ளிட்டவற்றை அறியும் சென்சார்களை பொருத்தினர்.

அவற்றில் இருந்து, மொபைல் போனுக்கு ஒயர்லெஸ் இணைப்பு வழங்கினர். அந்த மினியேச்சர் சாட்டிலைட்டுகளை, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலுான்களில் கட்டி, 100 மீட்டர் உயரம் வரை பறக்கவிட்டனர்.

இதுகுறித்து, மாணவியர் கூறியதாவது:


எங்களுக்கு, விங்க்ஸ் ஆப் சயின்ஸ் அகாடமி நிறுவனர்கள் அரவிந்த், சண்முகராஜா தலைமையில், ஆறுபேர் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சிக்குப்பின், நாங்களே மினியேச்சர் சாட்டிலைட்களை உருவாக்கி, அனுமதிக்கப்பட்ட 100 மீட்டர் கயிறில் கட்டி பறக்க விட்டோம்.

அதன்படி, தரையில் ஆக்சிஜன் அளவு 21 சதவீதமாகவும், மேலே பறக்கும்போது, 18 சதவீதமாகவும் இருந்தது. கார்பன் டை ஆக்சைடு, தரையில் 9.5 சதவீதமாகவும், மேலே 11 சதவீதமாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதம் தரையில் 53 சதவீதமாகவும், மேலே 55 சதவீதமாகவும் இருந்தது.

வெப்பநிலை தரையில் 35 டிகிரி, மேலே 33 டிகிரி செல்ஷியசாக பதிவானது. மேலே புற ஊதாக்கதிர்களின் அடர்த்தி 82; ஒளியின் அளவு 92; காந்தப்புலம் 205 ஆக பதிவானது. இந்த ஆய்வின் வாயிலாக, செயற்கைக்கோள் குறித்த புரிதலும், மேலும் இதுபற்றி அறியும் ஆவலும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபதாஸ் தினகரன் கூறுகையில், மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் பயிற்சியில் பங்கேற்றனர். விரைவில், இஸ்ரோவுக்கு அழைத்துச் சென்று, விண்ணில் பறக்கும் ராக்கெட், அதில் இணைக்கும் சாட்டிலைட் குறித்து அறியும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என்றார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us