பராமரிப்பின்றி இருளில் மூழ்கி கிடக்கிறது அண்ணாமலை பல்கலை வளாகம்

UPDATED : பிப் 05, 2025 12:00 AM
ADDED : பிப் 05, 2025 09:03 AM

சிதம்பரம்:
சிதம்பரத்ததில், நுாற்றாண்டு பாரம்பரியம் மிக்க அண்ணாமலை பல்கலைழகம் உள்ளது.
நிர்வாக குளறுபடியால் கடுமையாக நிதி நெருக்கடியில் சிக்கியதால், 2013ம் ஆண்டு பல்கலைக்கழகத்தை, தமிழக அரசு ஏற்றது. அதன் பின்பு, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் தமிழகத்தில் பல்வேறு |கல்லுாரிகள் மற்றும் அரசு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர்.
அரசு நிர்வாகம் ஏற்றபின்பு, பல்கலைகழகத்தில் பராமரிப்பு பணிகள் குறைந்தது. இதனால் பல்வேறு துறைகளில் உள்ள பல நுற்றாண்டு கட்டடங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது.
குறிப்பாக, பல்கலைகழக வளாகத்தில் மின் விளக்குகள் எரியாமல், இரவு நேரங்களில் இருளில் மூழ்கி விடுகிறது. பரந்து விரிந்து கிடக்கும் பல்கலை., வளாகம் இருண்டு கிடப்பதால், சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால், மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.
இதனால், பல்கலையில் விடுதிகள் இயங்கி வரும் நிலையில், பாதுகாப்பு கருதியும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதை தடுக்கவும், போர்க்கால அடிப்படையில், விளக்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கட்டடங்களை புதுப்பித்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.