புதிய பட்டப்படிப்புகள் துவக்கம்: பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் தகவல்

UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 09:54 AM

புதுச்சேரி:
பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசை, நடனத்துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத்துறை, இசைத்துறை, நாட்டியத்துறை ஆகிய 3 துறைகள் உள்ளன.
கடந்த 2003ம் ஆண்டு முதல் நாதஸ்வரம் மற்றும் தவில் பட்டயப் படிப்புகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும் மாலை நேர வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.
தற்போது நடப்புக் கல்வியாண்டு 2024--25 முதல் நாதஸ்வரம் தவில் மற்றும் புல்லாங்குழல் ஆகியவைகள் டிகிரி பட்டப்படிப்பாக துவங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், டிகிரி படிப்பில் சேர அனுமதிக்கப்படுவர்.
இதேபோன்று, இசைத்துறையில் வீணை, வயலின், மிருதங்கம் மற்றும் வாய்ப்பாட்டு இசை மற்றும் நடனத்துறையில் பரதநாட்டியம் ஆகியவை டிப்ளமோ பட்டயப்படிப்பாக துவங்கப்பட உள்ளன. இதுதவிர, நடனத்துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஒரு ஆண்டு கால முதுநிலை பட்டயப்படிப்பாக நட்டுவாங்கம் பயில வரவேற்கப்படுகின்றனர்.
மாலை நேர வகுப்புகள்
இதேபோல் பாரதியார் பல்கலை கூடத்தில் வாய்ப்பாட்டு, பாரதநாட்டியம், ஓவியம், வண்ண ஓவியம், துணி வண்ண ஓவியம், சுடுமண் சிற்பம் ஆகிய பிரிவுகளில் ஆறு மாத கால சான்றிதழ் பயிற்சிகள் மாலை நேர வகுப்புகளாக மூன்று நிலைகளில் நடக்க உள்ளன. முதல் நிலை வகுப்புகள் மாலை 5.30 மணி, இரண்டாம், மூன்றாம் நிலை வகுப்புகள் இரவு 7:00 மணிக்கு துவங்கும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களை பாரதியார் பல்கலைக்கூடத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.