Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காசி தமிழ்ச்சங்கம் 3.0- வாரணாசி சென்றடைந்த தமிழக மாணவர்கள்

காசி தமிழ்ச்சங்கம் 3.0- வாரணாசி சென்றடைந்த தமிழக மாணவர்கள்

காசி தமிழ்ச்சங்கம் 3.0- வாரணாசி சென்றடைந்த தமிழக மாணவர்கள்

காசி தமிழ்ச்சங்கம் 3.0- வாரணாசி சென்றடைந்த தமிழக மாணவர்கள்

UPDATED : பிப் 15, 2025 12:00 AMADDED : பிப் 15, 2025 05:34 PM


Google News
Latest Tamil News
சென்னை:
காசி தமிழ்ச் சங்கம் 3.0-வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய முதல் குழு வாரணாசிக்கு (காசி) சென்றடைந்தது. வணக்கம் காசி என்ற வாசகத்துடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக குழுவில் இடம்பெற்றுள்ள மாணவிகள் கூறுகையில், வட இந்தியாவுக்கும் தென்னிந்தாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை தெரிந்து கொள்ளும் நோக்கில் நான் நான்கு நாள் பயணமாக வந்துள்ளேன். இரண்டு பெரிய மாநிலங்களை இணைக்கும் இந்த அற்புதமான முயற்சிக்காக மத்திய அரசுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றனர்.

நான்கு நாட்கள் அங்கு பயணம் மேற்கொள்ளும்போது, தமிழக பிரதிநிதிகள் காசி விஸ்வநாதர் கோயில், அன்னபூர்ணா கோயில், நமோ காட், ராம்நகர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பிஎச்யு), ஹனுமன் படித்துறையில் உள்ள சுப்பிரமணிய பாரதியின் இல்லம் ஆகியவற்றைப் பார்வையிடுவார்கள். கல்வி அமர்வுகளைத் தொடர்ந்து, அவர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுவதுடன், அயோத்தி குழந்தை ராமர் கோவிலுக்குச் செல்வார்கள். பின்னர் புனித யாத்திரையை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்குப் புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us