பள்ளிகளில் மாணவர் மனசு புகார் பெட்டிக்கு முக்கியத்துவம்; கல்வித்துறை அறிவுறுத்தல்

UPDATED : பிப் 15, 2025 12:00 AM
ADDED : பிப் 15, 2025 10:42 AM

உடுமலை:
அரசுப்பள்ளிகளில் வைக்கப்படும் மாணவர் மனசு புகார்பெட்டியில் வரும் புகார்கள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, உடனடியாக தகவல் அளிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு நடுநிலை முதல் உயர்நிலை, மேல்நிலை வரை அனைத்து பள்ளிகளிலும், மாணவர் மனசு என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது, குழந்தை திருமணம் உள்ளிட்ட புகார்களை எழுதி, இதில் போடலாம்.
முன்பு மாதம் ஒருமுறை அல்லது சில நாட்களுக்கு ஒரு முறை என, இந்த பெட்டியை தலைமையாசிரியர்கள் திறந்து, அதிலுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். தற்போது பல பகுதிகளிலும், பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாவதை தொடர்ந்து, இதற்கு முக்கியத்துவம் அளிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அனைத்து அரசு பள்ளிகளிலும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு, பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார்களை கையாளுவது, போக்சோ சட்டம் குறித்து கூட்டம் நடத்தப்பட்டது.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிகளில் உள்ள மாணவர் மனசு புகார் பெட்டியை, வாரம் ஒரு முறை திறந்து பார்க்க வேண்டும். அதில் பாலியல் வன்கொடுமைகள் உட்பட புகார்கள் இருக்கும் பட்சத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், போலீசார் உள்ளிட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.
தலைமையாசிரியர்கள் சுயமாக புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல், சம்பந்தப்பட்ட துறைகளை அணுக வேண்டுமெனவும், புகார்களை வீடியோ பதிவு செய்வதற்கும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.