பொருளியல் தேர்வு ரொம்ப ஈஸி: பிளஸ் 2 மாணவ, மாணவியர் குஷி

UPDATED : மார் 18, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 09:59 AM
திருப்பூர்:
பிளஸ் 2வில், பொருளியல் தேர்வு எளிதாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், பொருளியல் பாட தேர்வு நடந்தது. மாவட்டத்தில், 10 ஆயிரத்து 778 மாணவ, மாணவியர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்த நிலையில், 92 பேர் ஆப்சென்ட் ஆகினர். 10 ஆயிரத்து 686 பேர் தேர்வெழுதினர். தனித் தேர்வர்களாக, விண்ணப்பித்த, 216 பேரில், 178 பேர் தேர்வெழுதினர். 38 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தேர்வு குறித்த மாணவர்களின் கருத்து:
அகல்யா:
பொருளியல் பாடத் தேர்வு மிக சுலபமாக இருந்தது; அனைத்து மதிப்பெண் கேள்விகளும் எளிதாக இருந்தன. புத்தகத்தின் உட்புறம் இருந்து தான், வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. வேலை வாய்ப்பு சார்ந்த உயர்கல்வியை தேர்வு செய்வதில், ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.தரண்யா:
பொருளியல் தேர்வு மிக எளிது என்றே சொல்லலாம். 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் கூட எளிதாக இருந்தது. படித்த கேள்விகளே கேட்கப்பட்டிருந்தது, திருப்தியளிக்கிறது. புத்தகம் முழுக்க படித்தால், சென்டம் பெற முடியும் என்பதை உணர்ந்தேன்.