பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு செங்கையில் ஆய்வு கூட்டம்

UPDATED : பிப் 25, 2024 12:00 AM
ADDED : பிப் 25, 2024 08:38 AM
செங்கல்பட்டு:
தமிழகம் முழுதும் பிளஸ் 2 தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி துவங்கி, 22ம் தேதி நிறைவு பெறுகிறது. பிளஸ் 1 தேர்வு வரும் 4ம் தேதி துவங்கி, 26ம் தேதி நிறைவு பெறுகிறது.செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 85 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்த வழிகாட்டி ஆய்வு கூட்டம், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமையில், நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில், தேர்வுத்துறை உதவி இயக்குனர் ரோகினி பங்கேற்று பேசியதாவது:
தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.தேர்வு நடைபெறும் மையங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், அய்யாசாமி, அரவிந்தன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.