ஸ்வாவலம்பன் மேளா கண்காட்சி இன்று நிறைவு
ஸ்வாவலம்பன் மேளா கண்காட்சி இன்று நிறைவு
ஸ்வாவலம்பன் மேளா கண்காட்சி இன்று நிறைவு
UPDATED : பிப் 25, 2024 12:00 AM
ADDED : பிப் 25, 2024 08:38 AM
சென்னை:
சுயதொழில் புரியும் பெண்கள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் வகையில், சிட்பி வங்கி சார்பில், ஸ்வாவலம்பன் மேளா மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.இந்தாண்டிற்கான ஸ்வாவலம்பன் மேளாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சி சென்னை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், கடந்த 21ம் தேதி துவங்கி இன்றுடன் நிறைவடைகிறது.இந்த கண்காட்சியில் மாநிலம் முழுதும் இருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சிட்பி வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ரவீந்திரன் கூறுகையில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. சிறு, குறு தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கத்தில் சிட்பி வங்கி சார்பில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றார்.