108 ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு ஜன.10ல் நேர்காணல்

UPDATED : ஜன 06, 2024 12:00 AM
ADDED : ஜன 06, 2024 10:37 AM
தேனி:
108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணிபுரிய ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஜன., 10ல் நடக்கும் தேர்வு நடைபெறுகிறது.தேனி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் பிரகாஷ் கூறியதாவது:
இத்தேர்வுக்கான முகாம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஜன., 10ல் நடக்க உள்ளது. ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதிற்கு மேல் 35 வயதிற்கு மிகாமல் இருப்பது அவசியம். 162.5 செ.மீ., உயரம் குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன டிரைவிங் லைசென்ஸ் எடுத்து 3 ஆண்டுகள், பேட்ஜ் லைசென்ஸ் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றிருப்பது அவசியம். தேர்வானவர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,820 வழங்கப்படும். தேர்வானவர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி தங்கும் வசதியுடன் வழங்கப்படும்.மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., ஆகிய படிப்புகளை பிளஸ் 2 தேர்ச்சிக்கு பின் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, நுண்ணுயிரியல், பயோ டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.16,080 வழங்கப்படும்.19 வயதிற்கு மேல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வானவர்கள் 50 நாட்கள் மருத்துவமனை பயிற்சி, ஆம்புலன்ஸ் நடைமுறை பயிற்சி வழங்கப்படும். தங்கும் வசதி செய்து தரப்படும். கூடுதல் விபரங்களுக்கு 044 - 288 88 060 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என்றார்.